தஞ்சை அருகே விபத்து 2 பஸ்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல் புதுவை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 89 பேர் படுகாயம்..!

 அய்யம்பேட்டை,

தஞ்சை அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 89 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று காலையில் நடந்த இந்த பயங்கர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பஸ்கள் நேருக்கு நேர் மோதல்

புதுச்சேரி மாநிலம் பாகூர் பேட் பகுதியை சேர்ந்த 30–க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 72 இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சைக்கு இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுவையில் இருந்து நேற்று அதிகாலையில் ஒரு சுற்றுலா பஸ்சில் புறப்பட்டனர். காலை 11.30 மணியளவில் தஞ்சை–கும்பகோணம் சாலையில் பசுபதிகோவில் அருகே பஸ் வந்தபோது எதிரே தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் 2 பஸ்களும் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடின.

வயல்வெளியில் இறங்கியது

இதில் கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதிவிட்டு வயலில் இறங்கி நின்றது. மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வந்த பஸ்சும் சாலையோர வயல்வெளியில் இறங்கி நின்றது. விபத்தில், 2 பஸ்களின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது.


விபத்து நடந்த இடத்தின் அருகே இருந்த விவசாயிகளும், அப்பகுதி பொதுமக்களும் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


89 பேர் படுகாயம்

இந்த விபத்தில் மொத்தம் 89 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாகமுத்து(54), ஜீவரத்தினம்(52), கல்யாணி(32), சகுந்தலா(19), மஞ்சமாதா(23), ரூபாவதி(27), கோகுல்ராஜ்(25), கிருஷ்ணவேணி(35), சுகந்தி(40), அகல்யா(20), சக்திவேல்(30), புதுவை பஸ் டிரைவர் பழனிச்சாமி, மேலும் 6 சிறுவர், சிறுமிகள் மற்றும் தஞ்சை பஸ் டிரைவர் திருவையாறு பெரும்புலியூர் பகுதியை சேர்ந்த கண்ணன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர், எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரைக்கண்ணு, உலகநாதன் எம்.எல்.ஏ., விவசாய தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் முத்தரசன் ஆகியோர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு நன்கு சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


Post a Comment

1 Comments

  1. lg service centre in faridabad,lg service centre in noida, lg service centre in gurgaon,lg service centre in delhi,Lg Customer care in delhi,Lg Customer care in faridabad,Lg Customer care in,noida,Lg Customer care in gurgaon,lg refrigerator customer care in gurgaon,Lg washing machine customer care in gurgaon,Lg Microwave customer care in gurgaon,Lg dishwasher customer care in gurgaon
    lg customer care & service centre

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........