வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் விண்ணப்பிக்க

வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இ - பாஸ் பெறவேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெற


வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற

 
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற

 
விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் மேற்கண்ட லின்ங்கில் உள் நுழைந்து மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்சாவை பேட்டு சம்பிட் கொடுங்கள் 

அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். 

அடுத்து வரும் விண்ணப்பத்தில் நீங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து தங்களது பெயர், முகவரி (வீடு மற்றும் செல்லும்இடம்), பயண வரம்பு ( மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே) என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும். 

அதேபோல் பயணத்தின் நேரம், எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். 

அடுத்து பயணர்கள் விவரம், வாகன விவரம், அடையாள அட்டை ஆகிய விவரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் டைப் செய்து கொள்ளுங்கள்

மருத்துவ அவசர நிலை என்றால் மருத்த சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம், 

திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும். 

இ-பாஸ் பெறுவதற்கு தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்கலாம். 

விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டதும், தங்கள் ஆவணங்கள் மற்றும் சமர்பிப்பு விவரங்கள் சரிபார்க்கப்படும், அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டதும் இ-பாஸ் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள்.
விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால், விண்ணப்பதாரர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்பட வேண்டும். 

தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும், 

நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், உடனடியாக இபாஸ் குறிப்பு எண்ணுடன் (SMS) மற்றும் (Email) மின்னஞ்சல் அனுப்பப்படும் .

மேலும்  உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்

1070 

1072 

1800 425 1333 

இந்த அவசரகால போக்குரவரத்து அனுமதிச் சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments