இ பாஸ் தேவையில்லை.. இ பதிவு செய்தால் போதும்.. எப்படி விண்ணப்பிப்பது.. விளக்கமளித்த தமிழக அரசு!

வரும் 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களிடையேயும் மாவட்டங்களுக்குள்ளும் பயணம் மேற்கொள்ள இ.பதிவு முறை கட்டாயம்.என்ற செய்திக்கு தமிழக அரசு விளக்கம்

வருகிற 17-ந்தேதி முதல் இது அமல்படுத்த இருக்கிறது. இதன்படி மாவட்டத்திற்குள்ளே பயணம் செய்யவும், மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யவும் இ-பதிவு கட்டாயமாகும்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

 அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ- பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.  நீங்கள் உங்கள் தகவல்களை அரசின் https://eregister.tnega.org/#/user/pass இணையதளத்தில் பதிவு செய்து ஆதாரம் வைத்திருந்தால் போதுமானது இ-பாஸ் வேறு , இ.பதிவு வேறு என தமிழக அரசு விளக்கம்.

மொபைல் மூலம் அனைத்து இ பாஸ்களும் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ள



Post a Comment

0 Comments