அயோத்தியில் கட்டப்படும் மசூதிக்கு வழங்கபடும் நன்கொடைக்கு மத்திய அரசின் 80G வரி விலக்கு

அயோத்தியின் தனிப்பூர் கிராமத்தில் கட்டப்படும் மசூதிக்கான நன்கொடைக்கு மத்திய அரசின் வரி விலக்கு கிடைத்துள்ளது. இதனை மசூதியை கட்டி வரும் அறக்கட்டளையான, இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுன்டேஷன் (ஐஐசிஎப்) தெரிவித்துள்ளது.

2021 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு மசூதி கட்டும் பணி துவங்கியுள்லது

புதியதாக கட்டப்படும் மசூதியின் சிறப்பம்சமாக, பல்துறை சிறப்பு மருத்துவமனை, சமூக சமையலறை மற்றும் நூலகம் ஆகியவை அடங்கும், 

இந்நிலையில் இந்த மசூதி கட்ட பொருளாதாரத்திற்க்கு பலர் நன்கொடை அளிக்கும் நிலையில் தற்போது மசூதிக்கு வழங்கபடும் நன்கொடைக்கு மத்திய அரசின் 80G வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

இது குறித்து ஐஐசிஎப் தலைவர் ஜபர் பரூக்கி கூறும்போது, '

வருமான வரிச் சட்டம் 80 ஜி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுவதற்காக  விண்ணப்பித்தோம். தற்போது வருமான வரி விலக்குக்கான சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதையொட்டி நன்கொடைக்கான விழிப்புணர்வு முகாம்களை விரைவில் தொடங்கவுள்ளோம்'

SOURCE:

https://www.indiatoday.in/india/story/donations-for-ayodhya-mosque-made-tax-free-report-1808264-2021-05-29

Post a Comment

0 Comments