புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமித்தது செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
புதுவை சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது.புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி, கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் மத்திய அரசு அறிவித்துள்ள 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனஉத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பாஜகவின் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........