இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட சேவை கட்டணங்களை அறிவித்துள்ளது அதன்படி..
SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அதன் வங்கிக்கிளைகள் அல்லது ATMல் மாதந்தோறும் 4 முறைகள் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம்.அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணமும், அதனுடன் GST யும் வசூலிக்கப்படும்.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு 10 பக்கம் கொண்ட செக் புத்தகத்தை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
புதிதாக காசோலை வாங்கினால் ரூ.40 கட்டணம் எனவும் அறிவிப்பு
அதே போல 25 காசோலைகளை பயன்படுத்த 75 ரூபாய் கட்டணத்துடன் GST தொகையை செலுத்த வேண்டும்.
மேலும் 10 பக்கங்கள் கொண்ட எமர்ஜென்சி காசோலை புத்தகத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது
எஸ்.பி.ஐ வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........