மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு ..!

 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகளுடன் கமல்ஹாசன் இன்று காலை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து  நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்தார். 

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பையும் கமல்ஹாசன் ஏற்கிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசகர்களாக பழ.கருப்பையா, வெ.பொன்ராஜ் நியமனம். 

துணைத் தலைவராக ஏ.ஜி.மவுரியா, 

நிர்வாகக் குழு உறுப்பினராக நடிகை ஸ்ரீபிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments