தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடிஅவர்கள்
கல்லூரி மாணவர்கள் சேர்க்கை என்பது ஜூலை 31-ம் தேதிக்குப் பின்தான் நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியாகிறது.எனவே அதன்பிறகு, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.
சில தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வருகிறது. அப்படி நடத்தும் தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........