தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறைந்து வரும் காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று திருச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களிடம்
கொரானா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனால், கொரோனா 3-வது அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிக்காட்டல்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் மற்றும் முதல்வரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........