சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டி நீற்க்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியை கடக்க கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் ஒரு வாகனம் 10 வினாடிகளுக்கு மேல் நிற்க்ககூடாது அதற்குல் அந்த வாகனம் சுங்கச்சாவடி தடைக் கம்பியை தாண்டி சென்றுவிடவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் சுங்கசாவடிகளின் இருபக்கங்களிலும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையவேண்டும் இந்த குறிப்பிட்ட 100 மீட்டருக்குள் வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் , இந்த 100 மீட்டரை தாண்டி மஞ்சள் கோட்டிற்கு வெளியே வாகனங்கள் நின்றால் அப்படி நிற்க்கும் அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பு
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........