ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ கழகம் அவதூறு நோட்டீஸ்..!

அலோபதி மருத்துவம் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்ட பாபா ராம்தேவிடம் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்திய மருத்துவ கழகத்தின் உத்தராகண்ட் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபா ராம்தேவ் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். 

இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. Allopathy is stupid என பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். 

இதற்கு இந்திய மருத்துவ கழகம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. 

இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை தலையிட்டதற்குப் பிறகு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் தொடர்பான தன்னுடைய கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், டாக்டர்களின் சங்கமான இந்திய மருத்துவ கழகத்தின் உத்தரகாண்ட் மாநில செயலாளர் அஜய் கன்னா சார்பில் பாபா ராம்தேவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 

அலோபதி மருத்துவத்துக்கு எதிரான உங்கள் கருத்து, இந்திய தண்டனை சட்டப்படி குற்றச்செயல் ஆகும். எங்கள் அமைப்பில் உள்ள 2 ஆயிரம் டாக்டரின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆகவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் நீங்கள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments