பாபநாசத்தில் அக்டோபர் 10ல் மக்கள் நேர்காணல் முகாம்..!

பாபநாசம் தாலுகாவில், கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் வரும், 10ம் தேதிமக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது.
கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் பகுதியிலுள்ள எடவாக்குடி கிராமத்தில், கலெக்டர் தலைமையில், வரும், 10ம் தேதி, மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது. முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.பட்டா மாறுதல் சான்று குறித்தும், தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், விதவை உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டம் ஆகியவற்றில் பயன்பெற தகுதியுடையோர், முன்னதாக, பாபநாசம் தாசில்தாரிடம் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments