வழுத்தூரில் தீ விபத்து 5 வீடுகள் எரிந்து சாம்பல் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்


வழுத்தூர் பெரிய தெரு அருகே உள்ள ஆற்றுப்படுகையில் உள்ள மூங்கில் தோப்பில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.. அப்போது காற்று பலமாக அடித்ததால், தீ மளமளவென்று பரவி.. மரங்களில் பற்றி கொண்றது.. ஆற்றங்கரையில் உள்ள மரங்கள் அனைத்தும் சேதமாகின... அருகில் இருந்த அபுபக்கர் என்பவரின் வீட்டு மாடியில் தீப்பிடித்தது.  இதில் அவர் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அருகே உள்ள பரக்கத் , மும்தாஜ், மைதீன் , ஆசியா பீவி இவர்களின் வீடுகளில் தீ பற்றி எரிந்தன அப்போது அங்குள்ள இன்னொரு கியாஸ் சிலிண்டரும் வெடித்து சிதரியதால் அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலும் தீ பற்றிக்கொண்டது தீ அனைப்பு வாகனம் வந்தபோதிலும் தீ யை கட்டுபடுத்த முடியவில்லை , கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ அனைப்பு வீரர் இருவர் மற்றும் சுற்றி நின்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டது இதனால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது ஆகவே "இவர்கள் உண்ண உணவு உடுத்த உடை இன்றி தவித்து வருகிறார்கள் ஆகவே நல்லுல்லம் கொண்ட சகோதரர்களே தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .


தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் .


இவன் 
காயிதே மில்லத் பொது நல சங்கம் 
வழுத்தூர்

தொடர்புக்கு
மக்கி பைசல் +91 9095122189         
அஸ்லம்        +91 9585251977
















































































































Post a Comment

0 Comments