ராஜகிரியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

முதல் நாளன்று பெண்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பரீதா பக்கீர் தலைமை தாங்கினார். அரபி பள்ளி மாணவிகள் சுமையா, நவுசாத் ஆகியோர் கிராஅத் ஓதினர். ராஜகிரி ஹிதாயத்துன் நிஸ்வான் பேராசிரியர் ஆபீதா பேகம் வரவேற்று பேசினார். "இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் ரஷியா பானு சிறப்புரையாற்றினார். பெண்களுக்கான தொழுகை சிறப்பாக நடைபெற்றது. திரளான பெண்கள் பீர்ஷா நகர் புதிய பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றி சென்றனார்...

ராஜகிரியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பகாக நடைபெற்றது..
பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சி பீர்ஷா நகரில் மஸ்ஜித் மர்ஹூமா பாத்திமா பின்த் ஹசன் என்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பகாக நடைபெற்றது. ராஜகிரி கீழப்பள்ளிவாசல் ஆலோசகர் என்.. அப்துல் லத்தீப் தலைமை தாங்கி, பள்ளிவாசலை திறந்து வைத்தார். பள்ளிவாசல் இமாம் இப்ராகிம் கிராஅத் ஓதினார். வழுத்தூர் சவுக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பசீர் அகம்மது வரவேற்று பேசினார். பீர்ஷா தைக்கால் டிரஸ்டி எம்.எம். அப்துல் வஹாப் முன்னிலை வகித்தார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம் உபயதுல்லா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜி.ஆர். மூப்பனார், துரைக்கண்ணு எம்.எல்., ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சேக்தாவூது, ஒன்றிய கவுன்சிலர் முகம்மது காசிம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் கோவி. அய்யாராசு, ஹாஜா செரீப், பாபநாசம் ஆர்.டி.பி மெட்ரிக் பள்ளி மேலாளர் அம்ஜத் அலி, வீரசோழன். ஹஜ்ரத்துல் இஸ்லாம் அரபி கல்லூரி முதல்வர் .எம்.அப்துல் காதர் பாகவி,
தொழில் அதிபர்கள் சாகுல் அமீது,முகமது ரபீ, சேக் அலாவுதீன், ராஜகிரி பெரிய பள்ளிவாசல் பரிபாலன் சபை தலைவர் நூர் முகமது, ராஜகிரி தான்ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக் பள்ளி தாளாளர், சாகுல் அமீது,ராஜகிரி  கீழப்பள்ளிவாசல் துணை செயலாளர் அஸ்ராப் அலி, பொருளாளர் அப்துல் ரசீது மற்றும் உலமாக்கள், ஜமத்தார்கள்  கலந்து கொண்டு பேசினார். விழாவில் பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பு மலரை முன்னாள் அமைச்சர் உபயதுல்லா வெளியிட்டார். விழா நிகழ்ச்சிகளை ராஜகிரி கீழப்பள்ளிவாசல் இமாம் சாகுல் அமீது தொகுத்து வழங்கினார். ராஜகிரி டி.எம். ஹாஜாமைதீன் நன்றி கூறினார். ஆண்களுக்கான தொழுகை சிறப்பாக நடைபெற்றது.பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் காவல் துறையினர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments