நாகூர் தர்ஹா கந்தூரி விழாவின் சிகர நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது…இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்…
நாகையை அடுத்த நாகூரில் கந்தூரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டிக்கான கந்தூரி விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் புறப்பட்டது. அப்போது சாம்பிராணிசட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார கூடுகள் , பெரிய சந்தனகூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து சென்றன. நிகழ்ச்சியில் அமைச்சர் செயபால் உள்பட ஏராளமானனோர் கலந்துக் கொண்டு எஜமான் அவர்களின் து.ஆவினை பெற்று சென்றனார்..
சந்தனக்கூடு நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்த போது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று சந்தனகூட்டை கண்டு மகிழ்ந்தனர். சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது சாலையில் இரு புறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று சந்தனகூட்டை கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் நியூ பஜார் லைன் வழியாக தர்காவின் கால் மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவர் கப்ருக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு தர்கா பரம்பரை கலிபா கலிபாமஸ்தான்சாகிபு துவா செய்து ஆண்டவர் கப்ருக்கு சந்தனம் பூசப்பட்டது.. விழாவையெட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.. பாதுகாப்பு பணியில் சுமார் 800 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்..
வழுத்தூரில் இருந்தும் AUTO,VAN,CAR,BIKE யன வழுத்தூர் இளைஞர்கள், பெரியவர்கள்,சிறுவர்கள்யான ஏராளமானனோர் நாகூருக்கு சென்று எஜமான் அவர்களின் து.ஆவினை பெற்று வந்தனார்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........