மீண்டும் நீங்கள் ஜனாதிபதியாக வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு “ சற்று காலம் பொறுத்திருங்கள்,. பின்னர் என்னிடம் கேளுங்கள் அப்போது நான் பதில் சொல்கிறேன்” என மிக ரத்தினச்சுருக்கமாக சொல்லி விட்டு கிளம்பி விட்டார் கலாம். இருப்பினும் இந்த பதிலில் சில சூசகம் இருப்பதாகவே நிருபர்கள் விழித்து கொண்டனர்.
தற்போதைய ஜனாதிபதி பிரதீபாவின் பதவி காலம் முடிவுஅடைவதையொட்டி வரும் ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான வேட்பாளர் யார் என்ற சஸ்பெண்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில் அப்துல்கலாமை மீண்டும் இந்த பதவியில் அமர்த்த வேண்டும் என பா.ஜ., சமாஜ்வாடி, அ.தி.மு.க., , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மறைமுக திட்டம் தீட்டி வருகின்றன.
ஜனாதிபதி தேர்தல் ஓட்டளிப்பது யார் ?
ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்களும், ( 776 பேர் ) அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களும் ( 4 ஆயிரத்து 120 பேர் ) ஓட்டளிக்கும் தகுதி படைத்தவர்கள். இதில் ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு 708 வீதம் மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 . மொத்த எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 474. இதில் தலா ஒரு எம்.எல்.ஏ,.க்களின் மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இரு உறுப்பினர்களும் இணைந்து வரும் பாய்ண்ட்களின் அடிப்படையில் ( மொத்தம் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ) இதில் அதிக ஓட்டுக்கள் பெறுபவரே வெற்றி பெறுவார். ஆனால் ஆளும் காங்கிரசுக்கும், பா.ஜ.,உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கும் மெஜாரிட்டி இல்லை. எனவே ஒருமித்த கருத்துடன் போட்டியில்லாமல் ஒரே வேட்பாளரை நிறுத்திட ( அப்துல்கலாம்) எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மவுனமாக இருந்து வந்த அப்துல்கலாம் நிருபர்களிடம் கூறுகையில் ; இதனை தவிர்க்வில்லை. இருப்பினும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள் , பின்னர் பதில் சொல்கிறேன் என்றார்.
தமிழக எம்.பி,ஒருவரின் மதிப்பு 308 :
தற்போதைய நிலவரப்படி உ .பி.,யில் ஆளும்கட்சியாக இருக்கும் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி முக்கிய இடம் வகிக்கிறது. இங்குள்ள ஒரு எம்.எல்.ஏ.,க்களின் மதிப்பு 495 இது தான் மற்ற மாநில மதிப்பை விட கூடுதல் ஆகும். குறைந்த மதிப்பு சிக்கிம் 19 . தமிழக எம்.பி,ஒருவரின் மதிப்பு 308.
ஏ,கே.,அந்தோணி- கருணாநிதி சந்திப்பு :
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........