சாதிவாரி கணக்கெடுப்பு


24 கேள்விகளுக்கான பதில்கள் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் இன்று தொடங்கியது முஸ்லிம் ஜமாஅத்துக்கள் விழிப்புடன் செயலாற்றுமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள் 



சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ கத்தில் இன்று தொடங்கியுள்ளது. 24 கேள்விகள், கேட்கப்பட்டு அவற்றிற்கான பதில்கள் உடனுக் குடன் கனிணியில் பதிவு செய்யப் பட உள்ளன. இக்கணக்கெடுப் பில் முஸ்லிம்கள் எவர் பெயரும் விடுபடாமல் பதிவு செய்ய விழிப்பு டன் செயலாற்றுமாறு அனைத்து ஜமாஅத்தினரையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநி லத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தக வல்களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 2012-ம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத் தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பு பணியில் வருவாய் அலுவலர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகியோர் வீடு வீடாக சென்று புள்ளி விவரங்களை சேகரித்து வருகின்றனர். சாதி வாரியான கணக்கெடுப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மடிக் கணினி கொடுக்கப்பட்டடுள் ளது. இந்த கணக்கெடுப்பில் 24 கேள்விகள் கேட்கப்பட்டு, கேள் விக்கான பதில்கள் உடனடியாக மடி கணியில் பதிவு செய்யப் படுகின்றன. பின்பு இதன் நகலை எடுத்து, குடும்ப தலை வரிடம் கையெப்பம் பெறப் படுகிறது. சாதி வாரி கணக் கெடுப்பு பணிகள் 40 நாட்களுக் குள் முடிக்க திட்டமிடப்பட்டுள் ளது.


800
வீடுகளுக்கு கணக் கெடுப்பாளர் ஒருவரும், கணினி ஆபரேட்டர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களை சேகரிப்பார். அவை உடனடியாக கணினி யில் பதிவு செய்யப்படும். பின் னர் வீட்டு உரிமையாளர் களுக்கு ஒரு அடையாளச் சீட்டு வழங்குவதுடன் கதவில் ஒரு ஸ்டிக்கரும் ஒட்டப்படும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்

இந்த கணக்கெடுப்பு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று தமிழகத்தில் தொடங் கியுள்ள சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக் கெடுப்பு 40 நாட்கள் நடை பெறும். பெயர், வயது, சாதி, வரு மானம், தொழில், வேலை வாய்ப்பு உள்ளிட்ட 24 கேள்வி கள் கேட்கப்பட்டு அவைகளுக் கான பதில்கள் கனிணியில் உட னுக்குடன் பதிவு செய்யப்படும்.

இதில், முஸ்லிம்கள் அனை வரும் விழிப்போடு செயலாற்றி எவர் ஒருவர் பெயரும் விடுபடா மல் பதிவு செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும்.

கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு அதன் பலனை சமுதாயம் முழுமையாக அனுபவிக்க இந்த கணக் கெடுப்பு அவசியப்படும் என்ப தால் இதை முஸ்லிம் சமுதாயம் அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

இஸ்லாத்தில் சாதிய பிரிவுகள் இல்லையென்றாலும், தமிழகத்தில் லெப்பை, (தமிழ்-உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர்) தக்னி, தூதே குலா, மாப்பிள்ளா, அன்சர், ஷேக், சையத் என ஏழு பிரிவு களாக வகைப்படுத்தியுள்ளது.




இதில், முதல் நான்கும் தேசிய அளவில் மத்திய அரசின் .பி.சி., பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

எனவே, தமிழகத்தில் கணக் கெடுக்க வரும் பணியாளர் களிடம் மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம் என்றும், சாதி என்ற கேள்விக்கு லெப்பை, தக்னி, தூதேகுலா, மாப்பிள்ளா ஆகிய நான்கில் ஒன்றை இடம் பெறச் செய்தால் மட்டுமே மத்திய-மாநில அரசுகளின் இட ஒதுக் கீட்டுச் சலுகையை பெற முடியும்.

இந்த பதிவின்போது முஸ் லிம்களின் பெயர் தவறுதலின்றி மிகச் சரியாக பதிவு செய்யப்பட தாங்களாகவே எழுதிக் கொடுக்க வேண்டும். அல்லது, தவறாக எழுதப்பட வில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த கணக்கெடுப்பு முடிந் ததும் தங்களிடத்தில் அடை யாள சீட்டு தரப்படுகிறதா? கதவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட் டுள்ளதா? என்பதில் கவனத் தோடு இருக்க வேண்டும்.

இதுபற்றி ஒவ்வொரு பள்ளி வாசல் மஹல்லா ஜமாஅத்திலும் அறிவிப்பு செய்து விழிப் புணர்வோடு இந்த பதிவை முழு அளவில் மேற்கொள்ள வேண்டு மென இந்திய யூனியன் முஸ் லிம் லீக் அந்த செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments