நமக்கும் வருங்காலச் சந்ததிக்குமாக பூமியைப் பாதுகாப்போம்..!

சூழல் மாசடைதல் காரணமாக பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சூழலை மாசு படுத்துகிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் நம்மால் முற்றுமுழுதாக சூழல் மாசைத் தவிர்க்க முடியாது, இருப்பினும் எம்மால் மாசு படும் அளவைக் குறைக்க நிச்சயம் முடியும். உதாரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை. நமது தினசரி உபயோகத்தில் உணவுப் பொருட்களிலிருந்து உடைகள் வரை அனைத்துமே பிளாஸ்டிக் கவர்களினால் மூடப்பட்டே இருக்கின்றன , கிடைக்கின்றன. அவற்றைத் தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை வெறுமனே வீசி எறியாமல் குப்பைத் தொட்டியில் போடலாமே!
அடுத்தது வாகனப் புகை !!!!!!
நகரங்களில் சூழல் மாசடைதல் பங்களிப்பில் வாகனப் புகைக்கு முதலிடம் உண்டு. சந்திப்பு சிக்னலில் நிற்கும் வாகனங்கள் நிற்கும் நேரம் வரையும் அவற்றின் எரிபொருளை எரித்து கார்பன்டை ஆக்சைடு வாயுவை வெளி விடுகின்றன. தரித்து நிற்கும் நேரம் பதினைந்து அல்லது இருபது வினாடிகளுக்கு மேல் எனத் தெரிந்தால் என்ஜினை நிறுத்தி வைக்கலாம். இதனால் வாகன எரிபொருள் மற்றும் ஆக்சிஜென் வாயுவையும் சேமிக்கலாம்.
என்ன நண்பர்களே !!!!
இன்னும் பல வழிகளில் சூழல் மாசடையும் முறைகளை குறைக்கலாம். சூழல் மாசடைதலைக் குறைத்தால் நாம் வாழும் சூழலையும் பூமியையும் பாதுகாக்கலாம்.
சூழல் மாசடையும் வழிகளை அடையாளம் கண்டால் அவற்றை தவிர்க்கவும் வழி காண முடியும்.
வாருங்கள் !!! நம்மால் முடியும்!!!

APRIL 22 HAPPY EARTH DAY … பூமியை பாதுகாப்போம்!!

Post a Comment

0 Comments