நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி,
உத்தர பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள்அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்பட பல்வேறு அரசின் சலுகைகளை பெறுவதற்கு தடை விதிக்கும் வகையில், மாநில அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் 2 குழந்தைகள் மட்டும் பெற்றவர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி தரப்படும். 2 குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு, அவர்களது பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும். அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும். எனவும் கூறப்பட்டுள்ளது
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........