நமது ALIF BLOOD DONORS குழுமம் நடத்திய இரத்ததான முகாமிற்க்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு..!

எல்லா புகழும் இறைவனுக்கே..
தேசிய மருத்துவர்கள் தினமாக நேற்று(01-07-2021) நமது அமைப்பு (07-06-2021 திங்கட்க்கிழமை) நடத்திய மாபெரும் இரத்ததான முகாமிற்க்கான பாராட்டு சான்றிதழை, தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமணை Dean G. ரவின் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமணை, இரத்த வங்கி தலைமை ஒருங்கினைப்பாளர் M. ஜெயந்தி அவர்கள், நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப. முஹம்மது அஸ்லம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் M. முஹம்மது மீருதீன் அவர்களிடம் வழங்கினார்கள்.
முகாமை சிறப்பான முறையில் நடத்தி தந்த தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமணை, இரத்த வங்கி தலைமை ஒருங்கினைப்பாளர் M. ஜெயந்தி அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. முகாமில் 52 சகோதர்கள் தன்னார்வலர்களாக கலந்துக்கொண்டு தங்களது உதிரத்தை தானமாக வழங்கினார்கள்.
*_ 🩸உதிரம் கொடுத்து - உயிரை காப்போம்🩸 _*
*_🩸 Alif Blood Donors🩸 _*
*_ 📌Thanjavur Dt 📌_*

#donateblood #blood #savelives #DonateBloodSaveLife #BloodCamp 


Post a Comment

0 Comments