மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
நந்திகிராமில் பாஜக வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதி கெளஷிக் சந்தா விசாரிக்க மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் நீதிபதி கெளஷிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் நீதித்துறையை தவறாக சித்தரிப்பதாக மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால்
பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும்
என்றும் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........