தமிழகத்தில் உள்ள கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் பணியாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 4,000 வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை ரூ. 4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிக்கை:
கொரோனா நோய் தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்-பட்டாச்சாரியார்கள்-பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் (1/2) pic.twitter.com/nEI0vF1xzY
— P.K. Sekar Babu (@PKSekarbabu) May 31, 2021
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........