லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
கேரளக் கரையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், அரபிக்கடலில் அமைந்திருக்கிறது லட்சத்தீவு அங்கு அங்கு மக்கள் தொகை சுமார் 65,000 மட்டுமே.மீன்பிடித் தொழில்தான் இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம். சுற்றுலா தளம் என்பதால் அதன் மூலமும் மக்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளுக்கு இந்திய யூனியனின் நிர்வாக அதிகாரியாக இருந்த தினேஷ்வர் வர்மா, கடந்த ஆண்டு இறந்ததை அடுத்து பொறுப்பு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளாக நியமித்து வந்த நிலையில் முதல்முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது மத்திய அரசு.
இவர் அங்கு சென்றதில் இருந்து இந்த தீவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் , அப்பகுதி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் முக்கியமாக
மாட்டிறைச்சி தடை,
மதுவிலக்கு நீக்கம்,
கடலோர மக்களின் குடில்களை அகற்ற உத்தரவு
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்ககூடாது
பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கலைத்தது .
அரபிக்கடலின் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் லட்சத் தீவுக்கென தனிச் சிறப்பான நிலவுரிமைச் சட்டம் உள்ளது லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டப்படி, லட்சத்தீவை பூர்வீகமாக கொண்ட தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்டு, தற்போது யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம்
என்பது உள்ளிட்ட பிரபுல் படேலின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து இவரை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று லட்சத்தீவு பொறுப்பு அதிகாரியை திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........