தமிழ்நாட்டின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த குழு நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்திட வேண்டும்
இந்நிலையில்
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23ம்
தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, அல்லது neetimpact2021@gmail.com என்ற
இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று நீதிபதி
ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் முகவரி:
அஞ்சல் முகவரி:
நீதியரசர் மாண்புமிகு ஏ.கே.ராஜன் உயர்நிலைக்குழு,
மருத்துவக் கல்வி இயக்ககம்(3 ஆவது தளம்),
கீழ்பாக்கம்,
சென்னை - 600 010.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........