டெட்தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும்.

இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் எனில், மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: 2011ம் ஆண்டு முதல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்.

7 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு புது சான்றிதழை திருத்தி தருதல் அல்லது புதிதாக வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

central gvt - updatenews360

Post a Comment

0 Comments