ஒரு கோடி பேர் வேலையிழக்கக் காரணமானவர் பிரதமர் மோடி : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 கொரோனா தொற்று பரவல் காலத்தில் நாடு முழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழக்கக் காரணமானவர் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பாவம் படும் அளவிற்கு கொத்து கொத்தாக பாதிப்புகளும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு மாதமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதாகல் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் ஒரு கோடி பேர் வேலையிழந்ததற்கு முழுக்க முழுக்க பிரதமர் மோடியே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments