யூ டியூப்பர் கிஷோர் கே சாமி கைது
சமூக
வலைதளங்களில் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, முதலமைச்சர் ஸ்டாலின்
ஆகியோர் மீது அவதூறு பரப்பியதாக கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த
சில நாட்களுக்கு முன்பு இவர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்
கருணாநிதி, மற்றும் முன்னாள் முதல்வர் பேறறிஞர் அண்ணா, மற்றும், தமிழக
முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான
கருத்துக்களை கூறியுள்ளார்
இதனையடுத்து
திமுகவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர்
ரவிசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கிஷோர் கே.சாமியை கைது
செய்தனர்.
நள்ளிரவு கைது செய்யப்பட்ட அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிஷோர் கே சாமியை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்க்கு
முன்பும் இதே கிஷோர் கே சாமி தமிழக ஊடகங்களில் பணி புரியும் பெண்
பத்திரிக்கையாளர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை
பரப்பியத்ற்காக கைது செய்யப்பட்டார்

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........