BREAKING தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
கோயம்புத்தூர்,
ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர்,
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர கரோனா
பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு இந்த தளர்வுகள் பொருந்தும்.
அதன்படி,
நாளை
முதல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி. காலை 6 முதல் மாலை 5
வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில்
தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ், சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் இயங்க அனுமதி
கட்டுமான
பணிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் கட்டுமான
நிறுவன அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்சல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........