முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து, பெண் காவலர்கள் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், சாலைகளில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் காத்திருப்பதை தவிர்த்து, அவர்களுக்கு வேறு பணி வழங்க தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து காவல்துறை டிஜிபி திரிபாதி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........