மத்திய அரசு அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரி 25 ம் தேதி ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது. இதனை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நேற்று முடிவடைந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மணுவில் தகவலை முதலில் வெளியிடுபவர் குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்பதாகவும், இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி உரிமைக்கு எதிரானது என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.
எனவே மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ஒழுங்கு விதிகளுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் கோரியுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........