தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலராக விக்ரம் கபூர் நியமிக்கபட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலராக பீலா ராஜேஷ், இடமாற்றம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலராக விபுநாயர், நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து துறை இயக்குனராக ஜெயஸ்ரீ ரகுநந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மையின் முதன்மை செயலராக மங்கத் ராம் சர்மா, நியமிக்கபட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநராக சிகி தாமஸ் வைத்யன், நியமிக்கப்பட்டுள்ளார்.