தலைநகர் கோலாலம்பூர் உள்ள Petronas இரட்டை கோபுர சுரங்கபாதையில் நேற்றிரவு மணி 8.45க்கு 213 பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்போங் பாரு ரயில் நிலையத்தில் இருந்து கேஎல்சிசி நிலையத்து இடையிலான வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த LRT ரயில், நடுவழியில் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 200 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்த பயணிகள் அனைவரும், கோலாலம்பூர் மருத்துவமனைக்கும் அருகிலுள்ள மற்ற சில மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் விபத்திற்கான காரணம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, போக்குவரத்து அமைச்சுக்கும் LRT ரயிலை இயக்கி வரும் Prasarana Malaysia நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருப்பதாகக் பிரதமர் முஹிதீன் யாசின் கூறினார்.
Two LRT trains have collided at an underground section near the KLCC station in Kuala Lumpur, Malaysia pic.twitter.com/06lQMsm67w
— Didi (@hussaindidi) May 24, 2021
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........