சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் அவர் 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததுள்ளார்அவர் மாணவி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனை அடுத்து மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் அவரை சென்னையில் உள்ள எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததால் ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........