வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அஞ்சலக சேமிப்பு கணக்கு எப்படி தொடங்குவது.. எப்படி..!
IPPB செயலியில் வழங்கபடும் சேவை
Balance Enquiry
Request for a Statement
Transfer Funds Within the Bank
AccountTransfer Funds to Other Bank
AccountRecharge
Prepaid and DTH
Pay Water and Electricity Bills
Manage Your Post Office Savings Account (POSA)
கணக்கை திறக்க தேவையானவை
ஆதார் கார்டு
பான் கார்டு
மொபைல் நம்பர்
அஞ்சல சேமிப்பு கணக்கு ஆன்லைனில் தொடங்குவது எப்படி?
முதலில் பிளே ஸ்டோரில் 'IPPB Banking' செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
அடுத்து அந்த ஆப்பில் ஒபன் அக்கவுண்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
அதில் பான் எண் மற்றும் ஆதார் நம்பரை கொடுத்து கிளிக் செய்யுங்கள்.
அதன் பின்னர் ஆதார் வெரிபிகேஷன் செய்யப்படும்.
இதற்காக உங்கள் ஆதார் எண்ணில் கொடுக்கப்பட்ட பதிவு மொபைல் எண்ணுக்கு ஓரு ஓடிபி வரும்.
அடுத்து அதில் உங்கள் தந்தை பெயர், தாயார் பெயர், கல்வித் தகுதி, உங்கள் முழு முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும்.
அடுத்து உங்கள் அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளதா என செக்செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு சப்மிட் கொடுக்கவும் அவ்வளவுதான்
அடுத்து உங்களது அஞ்சல கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும். உங்களின் IPPB கணக்கின் Customer ID மற்றும் Account Number ஆனது, மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அவற்றை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் நீங்கள் கணக்கை Open செய்துவிட்டால் மட்டும் முடிந்து விடாது. அதை மொபைல் செயலி மூலம் பயன்படுத்துவதற்கு Register செய்ய வேண்டும். அதை எவ்வாறு Register செய்வது என்பதை கீழே முழுவிவரம் காணலாம்.
மொபைல் ஆப் லாகின் செய்வது எப்படி?
IPPB Banking ஆப் ஒப்பன் செய்து Login Now என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து அதில் உங்களின் Account Number, Customer ID, Date of Birth மற்றும் Mobile Number ஆகியவற்றை உள்ளிட்டு Register என்பதை அழுத்தவும்.
அதன்பின்பு நான்கு இலக்க MPIN நம்பரை பாஸ்வேர்டு செட் செய்து Set MPIN என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும். அவ்வளவுதான்
இந்த MPIN பாஸ்வேர்டு என்பது Mobile PIN ஆகும். அதாவது நீங்கள் இந்த செயலியை திறப்பதற்கு இந்த MPIN ஆனது பயன்படும்.
குறிப்பு
இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலிட் ஆக இருக்கும். இதனை துவங்கிய ஒரு வருடத்திற்குள், நீங்கள் நேரடியாக அஞ்சல் அலுவலகத்திற்க்கு சென்று பையோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........