ஒரே ஒரு ஓடிபி மூலம் ரூ. 53 லட்சம் ஏமாந்த நபர்: உடனடியாக மீட்டுக் கொடுத்த காவல்துறை

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் அன்பரசு (62). மத்திய அரசின் ஓஎன்ஜிசிநிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பணி ஓய்வின்போது கிடைத்த பணத்தையும் நிலையான வைப்பாக வங்கியில் போட்டு வைத்துள்ளார்

இந்நிலையில் கடந்த 25 ம் தேதி மர்ம நபர் ஒருவர் தான் வங்கி மேலாளர் என கூறி  செல்போன் மூலம் அன்பரசனை தொடர்பு கொண்டுளார்.உங்கள்வங்கிக் கணக்கை புதுப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக உங்களுக்கு ஓடிபி எண் அனுப்பியுள்ளேன். அதை பார்த்து உடனேதெரிவியுங்கள். இல்லாவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கப்படுவதோடு, அதில் உள்ள பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று அன்பரசனிடம்  கூறியுள்ளார். 

இதனால்அதிர்ச்சி அடைந்த அன்பரசு, தனது கைபேசிக்கு வந்த ஓடிபி எண்ணை அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது வங்கி கணக்கில் இருந்து  53 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர் மோசடி செய்து எடுத்து விட்டார் என தெரியவந்தது

 
இதுகுறித்து உடனடியாக காவல்நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வில்லிவாக்கம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி 16 மணி நேரத்தில் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் அவரது பணம் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் அவரது வங்கி கணக்கில் செலுத்தினார்கள். 

போலீசார் துரிதமாக செயல்பட்டு, வங்கி அதிகாரிகள் உதவியுடன், 53 லட்சம் ரூபாயை திரும்ப பெற்றனர். அத்துடன், 25 ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக, வங்கி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.வங்கி மோசடி கும்பலிடம் இருந்து பணத்தை மீட்ட, எஸ்.ஐ., ராஜாசிங் மற்றும் போலீசாரை பாராட்டி, கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று சான்றிதழ் வழங்கினார்.

Post a Comment

0 Comments