BREAKING : தமிழகத்தில் மே 10 - 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9, 10) இரு நாள்களும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கவும், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரங்கு காலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

முழு ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது.அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.

 பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீதம் பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

இயங்க அனுமதிகப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அளிதல் உள்பட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Post a Comment

0 Comments