5 நிமிடம் ஆவி பிடித்தால் இவ்வளவு நன்மைகளா? இத்தனை பிரச்சினை தீருமா?

5 நிமிடம் ஆவி பிடித்தால் இவ்வளவு பிரச்சினை தீருமா?

மூக்கடைப்பு, குளிர் அல்லது சைனஸ், நீர் கோர்ப்பதால் தலை பாரமாக இருப்பது போன்ற நேரத்தில் ஆவி பிடிப்பது என்பது நாசி பாதைகளை தணிக்க மற்றும் திறக்கவும் மற்றும் சில நோய்த்தொற்று அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறவும் பரவலாக வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என நாம் வெளியில் சென்று வரும் பொழுது அவற்றால் ஏற்படும் நோய்த்தொற்று அவர்களை மிக அதிக அளவில் பாதிக்கும். இதனை போக்க சூடான தண்ணீரில்  ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும் சூடான வெந்நீரிலிருந்து வரும் ஆவியை சுவாசிக்கும்போது நம் மூச்சுக்குழல் சற்று வெதுவெதுப்பான வெப்பத்தை உணரும். இந்த வெப்பம் மூச்சுக்குழலில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தைக் குறைத்துச் சிக்கலற்ற சுவாசத்துக்கு உதவும்
ஆவி பிடிக்க என்ன என்ன சேர்க்கலாம்

மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி , இரண்டு கிராம்பு,ஐந்து மிளகு மற்றும் உப்பு இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கும் போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். 

ஆவி பிடிப்பது எப்படி?

சூடான நீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்துகொண்டு, நம்மை போர்வையால் மூடிக்கொண்டு, சூடான நீர் உள்ள பாத்திரத்தின் மூடியை சிறிது சிறிதாக விலக்கி, பாத்திரத்தில் இருந்து வெளியேறும் ஆவியை நாம் ஆழமாக சுவாசிக்க வேண்டும். கூடவே, முகம், முன் நெற்றி, கழுத்துப்பகுதி,களில் ஆவி படும்படி திருப்பி திருப்பி செய்துவர வேண்டும். 

ஆவியை, 10 முறை மூக்கு வழியாகவும், 10 முறை வாய் வழியாகவும் நன்றாக உள்ளே இழுத்து விட்டால், சுவாசம் நன்றாக இருக்கும். கொரோனா தொற்று இருந்தால், அப்போதே செயல் இழந்து விடும். 

தினமும் ஆவி பிடித்தால், நோய் தொற்று நெருங்காது. ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை செய்ய வேண்டும். மேலும், இதனை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் செய்துவரவேண்டியது அவசியமாகும்.

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஆவி பிடிப்பதால், தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலை வலியால் அவதிப்படுபவர்களுக்கு, கெட்ட நீர் முழுவதும் வெளியேறிவிடும். சளிக்கட்டு, சளித் தொந்தரவு, தொண்டையில் சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றுகள் முழுவதும் அழிந்துவிடும். அதோடு மார்பு சளியையும் முற்றிலும் கரைத்துவிடும்.
 
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும் : 
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடித்தால் மிகவும் சிறந்தது ஆகும்   ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். 

இருமல், ஜலதோஷம், சளித் தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் இதெல்லாம் பறந்தொடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும். 

முகப்பரு குறையும் : 

ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள பருக்கள் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும். 
 
முதுமை தோற்றம் மறையும் : 

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும். 

முகம் பொலிவு பெரும் : 

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

Post a Comment

0 Comments