போக்குவரத்து வாகன வரி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9.5.2021 அன்று முதலமைச்சர் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், போக்குவரது வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு போக்குவரது வாகனங்களுக்கான 30.06.2021 காலாண்டு முடிவிற்கான வரியினை அபராதமில்லாமல் செலுத்தும் கடைசி தேதியான 15.5.2021 என்ற தேதியானது 30.06.2021 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 1500000 போக்குவரது வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........