#இந்திய_யூனியன்_முஸ்லிம்_லீக்_சார்பில்_தனி_விமானம்_தமிழகத்திற்கு_ #அமைப்பு_சார்பில்_முதல்_விமானம்_அமீரகத்திலிருந்து_மதுரை_புறப்பட்டது

 *எல்லாப் புகழும் இறைவனுக்கே.!*
உலக மக்களின் வாழ்க்கை முறையை புரட்டிப் போட்ட கொடிய நோய் கொரோனா பரவல் பாதிப்பால் அல்லல்படும் அயலகத் தமிழர்களை,இன்னும் சொல்லப் போனால் அயலக இந்தியர்களை தாயகம் கொண்டு சேர்க்கும் தியாகப் பணியில் ஈடுபட்டிருப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமே.
அதன் அயலக அமைப்பான அமீரக காயிதே மில்லத் பேரவை அதை தமிழர்களுக்காக முன்னெடுத்துள்ளது.
அமீரக காயிதே மில்லத் பேரவையும்,துபாய் தமிழ்ச் சங்கமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஸாஹிப் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் அமீரக காயிதே மில்லத் பேரவை மூலம் அமீரகத் தமிழர்களை தாயகம் அனுப்ப அறிவிப்பாணை வெளியிட்டது.

இறைவன் அருளால் பேரவை அறிவிப்பை நம்பி பன்னூற்றுக் கணக்கானோர் தங்கள் பெயர், விபரங்களை பதிவு செய்தனர்.
முதற்கட்டமாக வந்த பட்டியலை இறுதி செய்து மூன்று விமானங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்று,அமீரக காயிதேமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி ஸாஹிப் அவர்களின் வழிகாட்டுதலில் பணிகள் முடுக்கி முன்னெடுக்கப்பட்டது.
அமீரக இந்தியத் தூதரகப் பணிகளை டாக்டர்.ஜெயந்திமாலா சுரேஷ் ஒருங்கிணைக்க, பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பட்டியல்களை பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி ஒருங்கிணைப்பில்,பேரவை அமைப்புச் செயலாளர் முத்தின் மைந்தன் காரை.பைஜுர் அலி,ஊடகப் பிரிவு செயலாளர் சொக்கம்பட்டி முஹம்மது கபீர் ஆகியோர் மூன்று தனித்தனி பட்டியல்களாகத் தயார் செய்து தூதரக ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்றக் கொறடா ஜனாப்.கே.நவாஸ் கனி ஸாஹிப் MP, அவர்களும்,
தமிழ் நாடு அரசின் அனுமதி,மாவட்ட நிர்வாகப் பணிகள் மற்றும் மதுரை வந்திறங்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தும் முகாம் ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஜனாப். K.A.M.முஹம்மது அபூபக்கர் ஸாஹிப் MLA ஆகிய மக்கள் பிரதிநிதிகள் இருவரும் இரவு பகல் பாராமல்
பம்பரமாய் பணியாற்றி நமது முயற்சி நிறைவேற துணை நின்றனர்.
பேரவை மூலம் பதிவு செய்திருந்த பயணிகளை தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பு பணிகளை சிறப்பாக செய்து முடித்த பொருளாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, ஷார்ஜா மண்டல துணைச் செயலாளர் வழுத்தூர் மக்கி ஃபைஸல், அபுதாபி மண்டலச் செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி,அல் முத்தீனா பகுதி செயலாளர் கீழக்கரை முஹம்மது காமில்,துபை வடக்கு அமீரகங்கள் செயலாளர் அஞ்சுக் கோட்டை அப்துல் ரஜ்ஜாக்,துபை மண்டல துணைச் செயலாளர் அய்யம்பேட்டை அமானுல்லாஹ்,துபாய் தமிழ்ச் சங்கம் பாலகிருஷ்ணன், விஜயராகவன், பிரசன்னா ஆகியோரது உழைப்பு நெகிழ்ச்சிக்குரியது.
அமீரக காயிதேமில்லத் பேரவை மற்றும் தமிழ்ச் சங்கம் சார்பில் இன்றைய விமானம்,மேலும் இயக்கப்பட உள்ள விமானங்களுக்கான அனைத்துப் பணிகளையும் அற்புதமாக ஒருங்கிணைத்த பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,துணைத் தலைவர் கும்பகோணம் முஹம்மது தாஹா,துபாய் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் டாக்டர்.ஜெயந்திமாலா சுரேஷ், பேரவைப் பெருளாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத் அலி ஆகியோருக்கு விமானப் பயணிகள் தங்களது மகிழ்ச்சிப் பிரவாகமான நன்றியை உரித்தாக்கினர்.
ராசல் கைமா சர்வதேச விமான நிலையத்தில் துணைப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி தலைமையில் நமது பேரவை நிர்வாகிகள் முத்தின் மைந்தன் ஃபைஜுர் அலி,முஹம்மது கபீர்,ராசல் கைமா மண்டலச் செயலாளர் ஜிஃப்ரி ஆகியோர் கடைசி வரை இருந்து பயணிகளை வழியனுப்பி வைத்தனர்.
இறைவன் அருளால் மதுரை விமான நிலையம் சென்றடையும் பயணிகளை தனிமைப்படுத்த பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் ஸாஹிப் MLA அவர்கள் வேண்டுகோளை ஏற்று தனது கல்லூரியில் இடம் அளித்த சேது பொறியல் கல்லூரியின் தாளாளர் அல்ஹாஜ்.அப்துல் ஜலீல் ஸாஹிப் அவர்களுக்கு பேரவையின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகள்.
183 பயணிகளுடன் மதுரை விமான நிலையம் வந்திறங்கும் அனைவரையும் வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஸாஹிப் MP அவர்கள் தலைமையில் MSF நிர்வாகிகள் தயார் நிலையில் உள்ளனர்.
கடினமான காலகட்டத்தில்,பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த மக்களை சொந்த ஊர் செல்ல நாம் செய்த ஏற்பாடுகளில் துணை நின்ற பேரவை நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.!
*வெளியீடு: அமீரக காயிதே மில்லத் பேரவை-UAE.*


Post a Comment

0 Comments