பண்டாரவாடை

பல வரலாற்று சிறப்புமிகுந்த ஊர்களில் நமதூரும் ஒன்றும்...

வீரத்தில் பல ஊர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த ஊர்..

ஒற்றுமைக்கு விற்றுட்ட சிறபுமிகக்க சிம்மாசனங்கள் வாழ்ந்த ஊர்...

சிலம்பாட்டத்தில் பல வீரர்களை உருவாக்கிய சிலம்பாட்ட சிப்பாய்கள் வாழ்ந்த ஊர்...

கராத்தே, குங்க் ஃபூ போன்ற தற்காப்பு கலைகளை கற்றவர்கள் வாழ்ந்த வீரர்களின் கூடாரம்..

தமிழகத்தில் பெயர்பெற்ற கும்பகோணம் வெற்றிலையை பெற்றெடுத்த ஊர்...

இந்த மாவட்டத்திலயே அதிகமாக நமதூர் பள்ளிக்காக வக்ஃப் செய்யபட்ட ஊர்...

பல இமாம்களையும், ஹாபில்களையும் உருவாக்கிய ஊர்...

நீர் ஆதாயத்திற்காக நம் முன்னோர்கள் தலைமுறைகளை காக்க பல குளங்களை உருவாக்கிய ஊர்..
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாண்டு பல வீடுகளில் நெல் வாசனை வீசிய ஊர்...

வாசம் வீசும் பிரியாணி பலவு போன்ற சாப்பாட்டு கலைகளில் கை பக்குவம் பெற்று களம் கானும் ஊர்..

ஊரின் மீதும் ஊர் மக்களின் மீதும் அக்கரையோடும் நலன் கருதியும்...

(முன்பு) சவூதி வெல்ஃபர் அசோசியேசன் மூலம் பல ஏழைகளுக்கு உதவிகரம் கொடுத்தார்கள்...

பிறகு பண்டாரவாடை கிராம சேவை சங்கம் மூலம் பற்பல நலத்தை இந்த ஊர் பெற்றது..

இன்று 75 வயதை தொடவிருக்கும் கல்விசங்கத்தின் சாதனைகள் ஒற்றுமையின் சின்னமல்லவா...

இன்றைய தலைமுறைகளில் பல மாற்றத்தை நோக்கி சென்றாலும் ஊரின் மீது மிகுந்த அக்கரையோடு 650மரங்களை வைத்து சாதித்து நீர்நிலை ஆதாயம் வேண்டி பற்பல விஷயங்களை ஆராயும் பண்டாரவாடை வளைகுடா செம்மல்கள் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டு அல்லவா..

இன்னும் சொல்லலாம்..

பலர் பலருக்கு தெரியாமல் கல்விக்காகவும் ஏழைக் குமர் காரியத்திற்காகவும் உதவும் கரங்கள் வாழ்கிற ஊர்..

ஐ.நா சபையில் கூட கால்பதித்த நமதூரர்..

இன்றைய பண்டாரவாடையில்...

04 ஜும்ஆ பள்ளிவாசல்கள்

03வக்த் பள்ளிவாசல்கள்..

ஜைனுல் உலூம் மதரசா

03 திருமண மண்டபங்கள்

300க்கும் மேற்பட்ட B.E படித்தவர்கள்...

1200க்கும் மேற்பட்ட இளங்கலை பெற்றவர்கள்...

இரண்டு பைலட் ..

இரண்டு டாக்டர்...

இரண்டு டாக்டேரேட்..

இரண்டு பெட்ரோல் பங்க்...

ரயில் நிலையம்..

அரசு சுகாதார மருத்துவமனை..

தபால் நிலையம்

1000க்கு மேற்பட்ட பிள்ளைகள் படிக்கும் கிரசென்ட் பள்ளி ..

52 பிள்ளைகள் படிக்கும் சூஃபிநகர் நடுநிலை பள்ளி..

50க்குள் பிள்ளைகள் இரயிலடி தொடக்க பள்ளி..

கோவில் தே.பேட்டையில் அமைந்துள்ள தொக்க பள்ளி..

பண்டாரவாடை சிவன் கோயில் (மச்சபுரீஸ்வரர் கோவில்.)

மாரியம்மன் கோயில்

மாதா கோயில் தேவாலயம் (ரயிலடி)

26மளிகை கடைகள்
07பெட்டி கடைகள்
03 காய்கறி கடைகள்
01 இரும்புக் கடை
01 கைலி கடை
02 கோழிக்கடை
01 கறிக்கடை
01 ஸ்டிக்கர் கடை..
42 ஆட்டோ
60 கார்கள்
10வேன்கள்..

குறிப்பிடாத பல விஷயங்கள் இருக்கலாம்...

இன்னும் இல்லாத பல விஷயங்கள் இந்த ஊருக்கு இல்லை...

அவைகள் என்னவென்று பலரும் அறிந்ததே...

இன்னும் நமதூரை சிறப்பாக்குவோம்

நல்ல மருத்துவமனை..
நல்ல மெடிக்கல் ஷாப்..
இரத்த பரிசோதனை நிலையம்..
24மணி நேர மருத்துவமனை..
பல தொழில் நிறுவனங்கள்...

முழுமையாக சொல்லப் போனால் நமதூரை நம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாய் விளங்க வைப்போம்..

சமுதாய தொண்டன்

அ.முஹம்மது மஃரூப்

Post a Comment

0 Comments