தஞ்சை சாந்தபிள்ளை கேட் பகுதியில் தினமும் காலை, மாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு கானும் வகையில் அங்கு மேம்பாலம் கட்டுமானப் பணி 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை நபார்டு, கிராம சாலைகள் திட்டம் மூலம் ரூ.52 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளாக கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 570 மீட்டர், அகலம் 12 மீட்டர் ஆகும்.
பாலத்தின் வேலை தொடங்கபட்ட காலத்தில் இருந்தே அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பாலத்தில் மேற்குப் பகுதியில் இறங்கும் இடத்தில் நாஞ்சிக்கோட்டை சாலை சந்திப்பும் சேருவதாலும், திட்டமிட்டப்படி இந்த பாலம் கட்டப்படவில்லை என போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று பாலத்தின் கிழக்குப்பகுதி இறக்கத்தில் சுமார் 100 அடி நீளத்திக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல பக்கவாட்டு சுவரிலும் விரிசல் காணப்பட்டது. இதை அந்ந பகுதியில் உள்ள மக்கள் நேற்று பார்வையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொழில்நுட்ப குழுவை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........