புழக்கத்துக்கு வருகிறது புதிய.2,000 மற்றும் ரூ 500 நோட்டு..!

 கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன.  அதிக  மதிப்புள்ள ரூபாய் நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழி வகுக்கும் என்பதால், இவற்றை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து  வந்தது. இந்த சூழ்நிலையில் ரூ.2,000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி மைசூர் அச்சகத்தில் அச்சிட்டு தயாராக வைத்துள்ளது. ரூ.500,  ரூ.1,000 நோட்டு செல்லாது என அறிவித்த பிரதமர்,  ரூ.2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் என்று கூறியுள்ளார்.
ரூ.10,000 நோட்டு

தற்போது புழக்கத்தில் விடப்பட உள்ள ரூ.2,000 நோட்டு அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டாக இருக்கும். இதற்கு முன்பு ரூ.10,000 ரூபாய்  நோட்டு அதிக மதிப்புடைய நோட்டாக இருந்தது. கடந்த 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் 10,000 மதிப்பிலான ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி  அச்சிட்டு வெளியிட்டது. ஆனால், இவை முறையே 1946 மற்றும் 1978ம் ஆண்டுகளில் வாபஸ் பெறப்பட்டன.

டெபாசிட் செய்ய முடியாது ஆனால் மாற்றி கொள்ளலாம்

இன்று முதல் டிசம்பர் 30ம் தேதி வரை, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது. அதே  சமயம், தங்களது அடையாள சான்றை (ஐடி) காண்பித்து அந்த ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31ம் தேதி வரை மாற்றி கொள்ளலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புரையோடிப்போன காயம்’

தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால் நாட்டு மக்களின்  நலன் பாதிக்கப்படுகிறது. ஊழல், கள்ளநோட்டு மற்றும் தீவிரவாதம் புரையோடி போன காயங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை  பின்னுக்கு தள்ளிவிட்டது. இதற்கு தீர்வு காணாவிட்டால், நாட்டின் மேம்பாடுதான் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி  பேசினார்.

Post a Comment

0 Comments