வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்...! தவிர்த்திடுவோம்...!

நன்றி:
தவ்ஹீத் சோஷியல் மீடியா
அஸ்ஸலாமு அலைக்கும்.....
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
பாகம்-1
வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு கலை கட்டி நிற்கின்றது.
வீடியோ இல்லாத திருமணம் திருமணமா?என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அனாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.
வீதியில் உலாவரும் வீடியோ கேமரா
கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முதலில் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் 🕌பள்ளிவாசல்
அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதணச் சின்னங்கள் தான்.
இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள்
கேமரா நுழைந்து
டீ காப்பி சப்ளை,
டிபன்,
மணமகன்
மணமகள் அலங்காரம்
என்று
மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.

மணமகன் இல்லத்திலிருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது
✍மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா,
பெண்கள்
விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை.
அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!
வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும்.
ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு விருந்தாகின்றனர்.
இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான்.
அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான்.
பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
இப்படி மணப்பெண் முதற்கொண்டு,
மனைவி மக்கள்,
🏻சகோதரிகள்,
கொழுந்தியாக்கள்
என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது.
இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு வீட்டுப் பெண்கள் போஸ் கொடுப்பது தான்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! "(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்'' என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி)யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 4758
இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது.
அதில் ஆயிஷா (ரலி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே
இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே
தொடரும்(இன்ஷா அல்லாஹ்...)
நன்றி...
தவ்ஹீத் சோஷியல் மீடியா

Post a Comment

0 Comments