கும்பகோணம் பெரியபள்ளி தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் ஹாஃபிழ் T.S. ஷீது முஹம்மது ஹழ்ரத் அவர்கள்.அவர்கள் வஃபாத்தானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கும்பகோணம் பெரியபள்ளி தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் ஹாஃபிழ் T.S. ஷீது முஹம்மது ஹழ்ரத் அவர்கள்.அவர்கள் வஃபாத்தானார்கள்.
23-04-2015 இன்று காலை சென்னையில் இறையடி சேர்ந்தார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்! நாளை கும்பகோணத்தில் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments