முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் (ஹனஃபி) பள்ளியின் ஹவுலடி மற்றும் கழிப்பிடம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்தது..!

 முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் (ஹனஃபி) பள்ளியின் ஹவுலடி மற்றும் கழிப்பிடம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்து விட்டது. டைல்ஸ் போடுவதற்கான செலவு தொகையை நமதூர் கத்தீப் மர்ஹூம் அலாமுத்தீன் அவர்களின் குமாரர் 'சமுதாயப் புரவலர்' ஹாஜி K.S.A. முஹம்மது இக்பால் அவர்கள் ஏற்றுக்கொண்டார். மேலும் ஹவுலின் கீழ் பகுதியில் பரப்பப்பட்டிருக்கும் “கூழாங்கல்” லுக்கான செலவை நமதூர் நரியுக்தி முஹம்மது காசிம் (உதவி முத்தவல்லி) அவர்கள் ஏற்றுக்கொண்டார். நரியுக்தி முஹம்மது காசிம் அவர்கள் ஏற்கனவே நமது பள்ளிவாசலுக்காக குடியிருப்பு ஒன்று கட்டிக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


இதற்கு உறுதுணையாக இருந்து, உடல் உழைப்பு தந்து செயல்பட்ட நிர்வாகஸ்தர்கள் குறிப்பாக செயலாளர் ஜனாப் M.A. தாஜுதீன், முத்தவல்லி M.R.A. அன்வர் பாட்சா, உதவி செயலாளர்கள் ஜனாப் A.R. அப்துல் ஜமீல், B. நத்தர்ஷா, உறுப்பினர்கள், அவ்வப்போது அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்திய உப தலைவர்கள் ஹாஜி H. முஹம்மது அலி, ஜனாப் M.A. ஹாஜாமைதீன் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய நல்ல உள்ளம் படைத்த ஜமாத்தார்கள் அனைவருக்கும் நன்றி.











Post a Comment

0 Comments