கருணை நபி (ஸல்) புகழ்க் காவியம் கஸீதத்துல் வித்ரிய்யா வெளியீடு..!

புத்தக பெயர்: கருணை நபி புகழ்க்காவியம்
ஆசிரியர்: தேங்கை ஷறப்புதீன் மிஸ்பாஹி
புத்தக விலை: ரூ. 300
வெளியீடு: 
சுலைமானியா பப்ளிஷர்ஸ், 81, அங்கப்பன் தெரு, சென்னை–1
புத்தகம் கிடைக்கும் இடம்:
ஹஜ்ரத் தேங்கை ஷறப்புதீன் மிஸ்பாஹி
தர்ஹா பள்ளிவாசல், வழுத்தூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
செல்: +91 94432 57510

முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உன்னத குண நலன்களையும், உயர்வினையும் போற்றும் அரபி இலக்கியம் ‘கஸீதத்துல் வித்ரிய்யா’. 17 ம் நூற்றாண்டில் இந்த இலக்கியத்தை உருவாக்கியவர் மெய்ஞ்ஞானி அஷ்ஷெய்க் ஸதகத்துல்லாஹில் காஹிரி (ரஹ்) அவர்கள். காயல்பட்டிணத்தில் பிறந்து கீழக்கரையில் அடக்கமாகி இருக்கும் இவர் எழுதிய இந்த காவியம் உலக முஸ்லிம்களின் உள்ளம் கவரந்த உன்னத தரம் மிக்க அரபி இலக்கியம் ஆகும். இதை தமிழில் தேங்கை ஷறப்புதீன் மிஸ்பாஹி சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். எளிய, இனிய தமிழில் வெளிவந்துள்ள இந்த நூல் நபிகளாரின் பெருமைகளை அழகாக விளக்குகிறது.

Post a Comment

0 Comments