இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை

 சென்னை, பிப் 09- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் இரண்டு நாள் பயிலரங்கம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு மசூதி தோட் டம், கிளியனூர் ஹாஜி எஸ்.ஏ. மஜீத் நினைவரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங் கியது. இரண்டு நாள் நடைபெறும் இப்பயிலரங்கில் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறு கின்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள், சமுதாய அறிஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணிகள் நாடு தழுவிய அளவில் முடுக்கி விடப் பட்டுள்ளன. இதன் துணை அமைப்புகளான முஸ்லிம் மாணவர் பேரவை, முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி ஆகியவற்றிற்கான செயல் திட்டங்கள் அளிக்கப் பட்டு அவை செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அமைப்புக் குழுவும் அமைக்கப்பட்டு கல்லூரி தோறும் அதன் கிளைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் வருங்காலத்திவ் சமுதாயத்தின் சிறந்த வழிகாட்டிகளாகவும் எதிர்கால தலைவர்களாகவும் உருவாகும் வகையில் திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது.

இதற்காக முஸ்லிம் மாணவர் பேரவை தமிழகத்தில் பல மண்டலங்களாக பிரிக்கப் பட்டு பயிலரங்கங்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்படி சென்னை மண்டலத்தின் பயிலரங்கம் பிப்ரவரி 9,10 சனி ஞாயிறு (இன்றும் நாளையும்) கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு மசூதி தோட்டம் கிளியனூர் ஹாஜி எஸ்.ஏ. மஜீத் நினைவரங்கில் நடைபெறு கிறது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இப்பயிலரங்கில் வட சென்னை, தென் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் மேற்கு, திருவண்ணா மலை, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, கடலூர் மற்றும் பாண்டிச்சேரி மாவட்டங்களை உள்ளடக்கிய 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

8 தலைப்புகளில் அமர்வுகள்

பயிலரங்கம் ஏன்-எதற்கு? முஸ்லிம் லீக் நேற்று, இன்று, நாளைய, இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள், முஸ்லிம் சமூகம், எதிர்நோக்கும் சவால்களும் சந்திக்கும் வழிகளும், ஆகிய நான்கு அமர்வுகள் முதல் நாளும்

சமூகவியல், ஊடகவியல், பேச்சாற்றல், ஆளுமைத்திறன் இளைய தலைமுறையும் சமூக பணியும், தலைமைத்துவம் ஆகிய நான்கு அமர்வுகள் இரண்டாம் நாளும் நடைபெறு கின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில செயலா ளர்கள் காயல் மகபூப், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், இஸ்லாமிய பவுண்டேஷன் டிரஸ்ட், துணைத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி, எஸ்.ஏ.மன்சூர் அலி, மாநில செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்,பி. ஆகியோர் பயிற்சி அளிக் கின்றனர்.

மாநில செயலாளர் கமுதி பஷீர், மாநில மகளிர் அணி நெறியாளர் முஹம்மது பேக், முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளர் எம்.கே. முஹம்மது யூனூஸ், மாநில செயலாளர் திருப்பூர் எம்.ஏ.சத்தார் தேசிய துணைச்செயலாளர் எச். அப்துல் பாசித், மாநில செயலாளர் ஏ.எம். 

ஷாஜகான்,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செய லாளர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில் கருத்துரை வழங்கு கின்றனர். மாநில துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது, மாவட்டங் களின் தலைவர்கள் வட சென்னை எம். ஜெய்னுல் ஆப்தீன், வேலூர் மேற்கு எஸ்.டி. நிஸார் அஹமது, திருவள்ளுர் காயல் அஹமது சாலிஹ், திருவண்ணாமலை டி.எம். பீர் முஹம்மது, 

காஞ்சிபுரம் எம்.எஸ். அப்துல் வகாப், மாநில துணைத் தலைவர் தளபதி ஷபிகுர் ரஹ்மான், புதுச்சேரி ரஹ்மத் துல்லாஹ்கான் ஆகியோர் அமர்வுகளுக்கு தலைமை ஏற் கின்றனர்.

மாவட்டங்களின் நிர்வாகி களான டாக்டர் இக்பால் பாஷா, எஸ்.எம். அமீர் அப்பாஸ், ஏ.எம். சித்தீக் அஹமது, ஆப்பனூர் ஜபருல்லாஹ், ஹைருல்லாஹ் கான், ஏ.எச். முஹம்மது இஸ்மாயில், கே.எஸ். தாவூது, சிக்கந்தர் பாஷா, காஞ்சி ஹஸன், அமானுல்லாஹ், பனையூர் முஹம்மது யூனூஸ்,

மாநில எஸ்.டி.யூ. பொதுச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில மகளிர் அணி அமைப் பாளர் தஷ்ரீஃப் ஜஹான், ஹைதர் அலிகான், ஜிகினி முஹம்மது அலி, பூவை எம்.எஸ். முஸ்தபா, சையது அமானுல் லாஹ், இ. முஹம்மது அலி, ஏ.சுக்கூர், எம். முஹம்மது கபீர், குடியாத்தம் ரஹ்மத் துல்லாகான், சான்பாஷா, ஆகியோர் முன்னிலை வகிக் கின்றனர்.

இன்று தொடங்கியது

இன்று காலை தொடங்கிய பயிலரங்கில் முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில செயலாளர் வி.ஏ. செய்யது பட்டாணி வரவேற்று பேசினார். தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் டாக்டர் ஹாஜா கே. மஜீதூ, புரசை எம். சிக்கந்தர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர். எம்.எஸ்.எஃப் மாநில இணைச்செயலாளர் புளியங்குடி எம். முஹம்மது அல் அமீன், வி.முஹம்மது தைய்யூப், சிராஜ் தீன், எம். அப்துல் பாசித் , டி.கே. ஷாநவாஸ்,, ராஜா முஹம்மது, பாம்புகோவில் சந்தை வி.ஏ. செய்யது அபூதாஹிர் ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்து கின்றனர். எம்.எஸ்.எஃப் அமைப்புக் குழு உறுப்பினர்கள் எம். அன்சாரி, ஐ. ஷபீர் அஹமது, நன்றி கூறுகின்றனர். இப்பயிலரங்கில் மாணவர் கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர். பிற மாவட்டங்களிலிருந்தும் பார்வை யாளர்களாக பலர் வந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. வரவேற்பு பேணர்கள் வைக்கப்பட்டுள் ளன. இப்பயிலரங்கம் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தி யுள் ளது.



















































































































































































Post a Comment

0 Comments