சென்னை, ஜன.9- மத்திய அரசுடனான பகைமை போக்கால்தான் இன்று தமிழகம் தத்தளிக் கிறது. இங்கு நிலவும் கடுமை யான மின்வெட்டுக்கு அ.இ. அ.தி.மு.க. அரசே காரணம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சி புறநகர் மாவட்டத் தில் பிற முஸ்லிம் அமைப்புகளி லிருந்து விலகி. பிர்தௌஸ், சலீம், சித்தீக் ஆகியோர் தலைமையில் 25 இளைஞர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண் டனர்.
திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம். முஹம்மது ஃபாரூக் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் அனவைரையும் வர வேற்றுப் பேசினார்.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவ ருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர் களின் கேள்விகளுக்கு பதில ளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது-
தமிழகத்தில் எந்த மாவட் டத்திற்கும் இல்லாத சிறப்பு திருச்சிக்கு இருக்கிறது. இந்த மாவட்டத்தை `நெஞ்சத் தாமரை’ என்று சொல்லப்படும். ஏனெனில் அனைத்து மாவட்ட மக்களையும் திருச்சியில் காண முடிகிறது. அதனால் தான் இந்த சிறப்புப் பெயர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு `ஏணி’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற - சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் நாடு முழுவதும் நாங்கள் `ஏணி’ சின்னத்தில் போட்டியிடுவோம்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்ட ணியிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி யிலும் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும். இதில் எந்த மாற்றமுமில்லை. மற்ற மாநிலங் களைப் பொறுத்தவரையில் அதற்காகஅமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அந்தந்த மாநிலங் களில் சுற்றுப்பயணம் செய்து தரும் அறிக்கையின் அடிப்படை யில் அம் மாநில கூட்டணிகள் குறித்து முடிவு அறிவிக்கப் படும்.
பிற அமைப்புகளிலிருந்து விலகி இ.யூ. முஸ்லிம் லீகில் இளைஞர்கள் இணைந்தனர்
நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்கும் தேசிய பயிலரங்கம் வரும் மார்ச் 9, 10 தேதிகளில் டெல்லியில் நடை பெறுகிறது.
கட்சியின் வரலாறு, சட்டத் திட்டங்கள், எதிர்கால செயல் திட்டங்கள், சமயசார்பற்ற சமூக நீதியை நிலைநாட்டுவ தற்கான வழிமுறைகள் குறித்து இந்த பயிலரங்கில் பயிற்சியளிக்கப் படும்.
இதேபோன்று தமிழகத்தில் முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் பிப்ரவரி 9, 10 தேதிகளில் சென்னையில் மாணவர்க ளுக்கான பயிலரங்கம் நடை பெறுகிறது.
இன்று திருச்சி புறநகர் மாவட்டத்தில் பிற அமைப்புகளி லிருந்து விலகி 25 இளைஞர் கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்துள்ளனர். பிர்தௌஸ், சலீம், சித்தீக் உள்ளிட்ட அந்த இளைஞர்கள் ஆற்றல் மிக்கவர்கள். சேவை ஆர்வம் கொண்டவர்கள். அவர் களை வரவேற்கிறோம். இந்த இயக்கத்தின் கொள்கைகளை யும், லட்சியங்களையும் மாநிலம் முழுவதும் அவர்கள் பரப்ப வேண்டும். ஆட்சி நடக்கவில்லை - நாள் கடத்தப்படுகிறது
தமிழ்நாட்டில் ஆட்சி நடக்க வில்லை. ஆட்சியின் பெயரால் நாள்தான் கடத்தப்படுகிறது. மிகக் கடுமையான மின்வெட்டு இம் மாநிலத்தில்தான் அமலில் உள்ளது. தி.மு.க. ஆட்சியின் போது பிற மாநிலங்களிலிருந்து உபரியாக உள்ள மின்சாரத்தை கேட்டுப் பெற்று இங்கு மின்வெட்டு குறைக்கப்பட்டது. அதேவழியை பின்பற்றி உபரி மின்சாரத்தை பிற மாநிலங் களிலிருந்து பெறுமாறு தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். ஆனால், அ.இ. அ.தி.மு.க. அரசு அதை செவி மடுக்கவில்லை.
இப்போது தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்தெல்லாம் தொழில் நிறுவனங்கள் மூடி, தொழிலாளர்களெல்லாம் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து விட்டனர். சென்னை மாநகர் தத்தளிக்கிறது. வருங் காலத்தில் இது அரசியல் குழப்பத்தை கொண்டு வந்து விடும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல் பொது மக்கள் போராடி இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட பின் இப்போது சத்தீஸ் கர் மாநிலத்திலிருந்து ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 2,500 மெகாவாட் மின்சாரம் பெற இருப்பதாகவும், இது மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற் றப்படும் என்றும் அரசு அறி விக்கிறது. கடந்த தி.மு.க. அரசு மத்திய அரசோடு நட்பு பாராட்டி காரியங்களை சாதித்தது. ஆனால், அ.இ.அ.தி.மு.க. அரசு மத்திய அரசுடன் பகைமை உணர்வுடன் செயல்படுவதால் காரியங்களை சாதிக்க முடிய வில்லை. அதன் விளைவையே தமிழகம் அனுபவிக்கிறது. காவிரிப் பிரச்சினை
காவிரி கண்காணிப்பு ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் பதிவு செய்யாததற்கு தி.மு.க. வின் முட்டுக்கட்டையே காரணம் என ஜெயலலிதா சொல்லி வருவது முற்றிலும் தவறானது.
ஏனெனில், காவிரி கண் காணிப்பு ஆணையம் அமைவ தற்கே தி.மு.க. தலைவர் கலைஞர்தான் காரணம். காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மூலம் பெருமுயற்சி செய்தவர் கலைஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உச்சநீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி அரசிதழில் பதிவுசெய்வதை மத்திய அரசு தாமதப்படுத்து வதற்கு தி.மு.க. வை குறை கூறுவது சரியானது அல்ல.
தி.மு.க. அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலின்
தி.மு.க.வில் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலினை முன்மொழிவேன் என கலைஞர் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. தி.மு.க.வினரின் ஒட்டு மொத்த கருத்தை அறிந்தே கலைஞர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதை தி.மு.க.தொண்டர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார் கள். ஏனெனில் தொண்டர் களின் மன நிலையை தெளி வாக அறிந்தவர் கலைஞர்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப் பிட்டார்.
இந் நிகழ்ச்சியிலும், செய்தி யாளர் சந்திப்பிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் மவ்லவி உமர் பாரூக் மழாஹிரி, செய லாளர் பீர் முஹம்மது, பொரு ளாளர் அமீருத்தீன், துணைத் தலைவர்கள் ஹுமாயூன், நிஜாம்,
திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் அம்ஜத் இப்ராஹீம், துணைச் செயலாளர் எம். அப்துல் ரஹீம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜித் வாப்பா, எஸ். முஹம்மது கனி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அப்துல் அஜீஸ், எஃப். உமர் கத்தாப், அஸ்ரப் அலி, ரியா ஸுதீன், செய்யது அபுதாகீர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

1 Comments
am
ReplyDeleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........