ஜனவரி 12 சனி காலை 10 மணிக்கு சென்னையில் முஸ்லிம் யூத் லீக் மாநில - மாவட்ட அமைப்புக்குழு கூட்டம் எம்.ஒய்.எல். மாநிலச் செயலாளர் எம்.கே. முஹம்மது யூனூஸ் அறிக்கை

சென்னை, ஜன.7- இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அமைப்பான முஸ்லிம் யூத் லீகின் தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட, நகர அளவிலான அமைப்புக் குழு கூட்டம் ஜனவரி 12-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் நடை பெறுகிறது. 

இது தொடர்பாக முஸ்லிம் யூத் லீகின் தமிழ்நாடு மாநில செயலாளர் பள்ளபட்டி எம்.கே. முஹம்மது யூனூஸ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டம் கோழிக்கோட்டில் நடைபெற்ற போது முஸ்லிம் யூத் லீக் அமைப்புப் பணிகளை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தி விரைவுபடுத்த வேண்டும் என்றும், தேசிய அளவில் இதன் மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்து அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் முஸ்லிம் யூத் லீக் பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளன. 

தமிழகத்தில் முஸ்லிம் யூத் லீகின் மாநில, மாவட்ட, நகர அளவிலான அமைப்புக்குழு கூட்டம் ஜனவரி 12-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள அன்னை ஆயிஷா மஹாலில் நடைபெறுகிறது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் முன்னி லையில் நடைபெறும் இக்கூட்டத் தில் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர்கள் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, தளபதி ஷபீகுர் ரஹ்மான், 

மாநிலச் செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், ஆம்பூர் எச். அப்துல் பாஸித், திருப்பூர் எம்.ஏ. சத்தார், 

வழக்கறிஞர் ஜீவகிரி தரன், ஆடுதுறை ஏ.எம். ஷாஜ ஹான், 

முஸ்லிம் யூத் லீகின் மாநில இணைச் செயலாளர்கள் வழக் கறிஞர் அதிரை முனாப், ஈரோடு முஹம்மது ஆரிப், பனையூர் எம். முஹம்மது யூனூஸ், தென் காசி எம். முஹம்மது அலி, கோட்டகுப்பம் அன்வர் பாட்ஷா மற்றும் மாநில அமைப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப் பாளர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகின்றனர். 

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் முஸ்லிம் யூத் லீக் அமைப்புக்குழுக்களை ஏற்படுத்துவது, மண்டல வாரியாக யூத் லீக் பயிலரங்கங் களை நடத்துவது, முஸ்லிம் லீக் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பது உள்ளிட்ட விஷயங் கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 

மேலும், எதிர்வரும் பிப்ரவரி 9-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய அளவிலான முஸ்லிம் இளைய தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் ஏப்ரல் 7-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் தேசிய யூத் லீக் பிரதிநிதிகள் மாநாட்டிலும் தமிழக யூத் லீகின் பங்களிப்பு குறித்தும் இக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. 

www.myltamilnadu இணையதளம் துவக்கம் 

இக்கூட்டத்தில் றறற.அலடவயஅடையேனர.உடிஅ என்ற இணைய தளம் தலைவர் பேராசிரியர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது. முஸ்லிம் யூத் லீகிற்கு ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கும் பணியும் தொடங்கப் பட உள்ளது. 

மணிச்சுடர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணியாளர்கள் இக்கூட்டத்தில் கவுரவிக்கப்பட உள்ளனர். 

மிக முக்கியமான இக்கூட் டத்திற்கு முஸ்லிம் யூத் லீகின் மாநில, மாவட்ட, நகரப் பொறுப் பாளர்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். 

இவ்வாறு பள்ளபட்டி எம். கே.முஹம்மது யூனூஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments