துப்பாக்கி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்க

சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை, IUML, தமுமுக, பாப்புலர் ப்ரண்ட், ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், SDPI, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், WPI, தேசிய லீக், ஐக்கிய சமாதானப் பேரவை, தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் தொண்டு இயக்கம், இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், ஜம்மிபத்துல் உலமாயே ஹிந்த், ஆல் இந்தியா மில் கவுன்சில், உள்ளிட்ட 24 அமைப்புகளை உள்ளடக்கிய
 இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.

துப்பாக்கி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு, தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு அமுல்படுத்த வேண்டும்.

இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும்.

முஸ்லிம்களின் கட்டாய திருமண பதிவை தளர்த்த வேண்டும்

என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

Post a Comment

0 Comments